Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் காணாமல்போயுள்ளார்


மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பத்து நாட்களாக் காணவில்லையென 
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
வந்தாறுமூலை - உப்போடை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கோபாலப்பிள்ளை ஐஸ்வர்யா என்ற மாணவி கடந்த மாதம் அதிகாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

“தனவந்தர் ஒருவரது உதவியுடன் தான் உயர் கல்வியைத் தொடரப் போகிறேன். ஐந்து வருடங்களின் பின்னரே வீடு திரும்புவேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments