மலேசிய எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பக் ஏவுகணை முறைமை கிழக்கு உக்ரேனிய நகரொன்றிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ டிரக் வண்டியொன்றில் கடத்தப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரால் எடுக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய எல்லையிலுள்ள பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வந்த டிரக் வண்டியை இரு கிலோமீற்றர் பின் தொடர்ந்து குறிப்பிட்ட வாகன சாரதி படமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதையொத்த இரண்டாவது டிரக் வண்டி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது
0 Comments