Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இருந்து சவூதி சென்ற தமிழ்ப் பெண்ணிற்கு நடந்த சித்திரவதை அம்பலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாட்டுக்கு வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பிரதேச சபை வீதி, கோரகல்லிமடு என்ற விலாசத்தை சேர்ந்த 04 பெண் பிள்ளைகளின் தாயான தங்கராசா ஞானம்மா (வயது 41) என்பவரே இவர் ஆவார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் சேர்க்கப்பட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டு எஜமான் சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தியதாகவும், சம்பளத்தை தருமாறு கேட்டு கெஞ்சியதால் மூன்று மாதச் சம்பளத்துடன் நாட்டுக்கு திருப்பி அனுப்பியதாகவும் இவர் தெரிவித்து உள்ளார். எஜமான் அடித்து படியில் இருந்து தள்ளி விட்டபோது இவரின் கால் உடைந்து விட்டது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உதவியுடனேயே திரும்பி வந்து உள்ளார். இவரின் கால்கள் செயல் இழந்து போய் விட்டன என்று அஞ்சப்படுகின்றது.

Saute-Attaced Saute-Attaced-01 Saute-Attaced-02 Saute-Attaced-03

- See more at: http://www.canadamirror.com/canada/29443.html#sthash.8iIi561C.XHunB91E.dpuf

Post a Comment

0 Comments