Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு புதுப்பால வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு புதுப்பால வீதியில் உள்ள வியாபார நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று (26.07.2014)தீப்பற்றி எரிந்ததாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
 
லொயிட்ஸ் அவனியுவில் உள்ள என். பாலச்சந்திரன் என்பவரின் டொயாட்டா ஹையேஸ் ரக வான் ஒன்றே தீப்பற்றியது.
 
விடுமுறை நாளாக உள்ளதனால் அருகில் உள்ள வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு யாரும் இல்லாத நிலையிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
 
தீயணைப்புப் படையினர் வந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எனினும் வாகனம் முற்றிக எரிந்துள்ளது.
 
மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







Post a Comment

0 Comments