Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மினி சூறாவளியில் சிக்கி 45 வீடுகள் சேதம்

ஹங்குரன்கெத்த பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ரத்லேண்ட் தோட்டத்தில் 12.07.2014 பிற்பகல் 2 மணியளவில் வீசிய மினி சூறாவளியின் காரணமாக தோட்டக்குடியிருப்புக்களின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. 
 
இதன் காரணமாக இந்தத் தோட்டக்குடியிருப்புக்களில் பாதிக்கப்பட்ட 45 குடும்பத்தினர் ரத்லேண்ட் தோட்ட ஆலயத்திலும் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளரிடம் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Post a Comment

0 Comments