Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை இராணுவத்தில் இணைந்த 30 தமிழ் யுவதிகள் பயிற்சியை முடித்து வெளியேறினர்!

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்து கொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments