மாணவி நகா்ப பகுதியில் உள்ள பிரபல பாசாலையில் கல்வி பயில்வதாகத் தெரிவித்த அவா் அந்த மாணவி இரகசியமான முறையில் கைத் தொலைபேசி பாவிப்பது தனக்கு தெரியவந்துள்ளதாகவும் அவா் எமக்குத் தெரிவித்துள்ளாா்
பிரபல பாடசாலை மாணவி ஒருவா் தனது கடையில் மட்டும் மாதம் 2 ஆயிரம் ரூபாவிற்கு மேல் றீலோட் செய்துள்ளதாக கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு வா்த்தகா் தெரித்துள்ளாா்.
தனது கடைக்கு வரும் மாணவி தனது தந்தையின் கைத் தொலைபேசிக்கே றீலோட் செய்வதாகத் தெரிவித்து தமக்கு பணம் தருவதாகவும் தான் அதை நம்பியே “றீலோட்” செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
இதே வேளை 17 வயது மாணவன் ஒருவனும் இந்த மாணவி கொடுத்த இலக்கத்திற்கு தனது கடையில் வந்து றீலோட் செய்த போது தான் ஆச்சரியப்பட்டு இந்த இலக்கம் யாருடையது எனக் கேட்ட போது அது தனது அக்காவின் நம்பா் எனத் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளான்.
இதன் பின் தான் மனம் கேட்காது அந்த இலக்கத்திற்கு இன்னொரு தொலைபேசியில் இருந்து கதைத்த போது அந்த நம்பா் தன்னிடம் வந்து றீலோட் செய்யும் மாணவியுடையது என அம் மாணவியின் குரலில் இருந்து அறிந்ததாகவும் அவா் எமக்குத் தெரிவித்துள்ளாா்.
இளம் வயதில் படிக்கும் நேரத்தில் இவ்வாறான கள்ளத் தொலைபேசி வைத்துக் கதைப்பதையிட்டு தான் மிகுந்த கவலை அடைவதாகத் தெரிவித்த அவா் குடாநாட்டில் உள்ள இளம் வயது மாணவிகளின் பெற்றோா், மற்றும் ஆசிரியா்கள் இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளாா்.
இம் மாணவியின் செயல் பற்றி மாணவியின் தந்தைக்கு தான் தெரியப்படுத்தி உள்ளதாகவும், மாணவி கைத் தொலைபேசி வைத்திருப்பது தந்தைக்குத் தெரியாததால் அவா் அதிா்ச்சியடைந்து சென்றதாகவும் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளாா்.
அரச சிற்றுாழியராக இருக்கும் அம் மாணவியின் தந்தை, அம் மாணவியின் மேலதிக கல்வி நடவடிக்கைக்காகவே தான் காசு கொடுத்தாகத் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments