ஒன்பது நண்பர்களுடன் இணைந்து மனைவியை கற்பழித்த கணவன் .-இந்தியாவில் நடந்த பயங்கரம்
பெண்ணொருவர் தமது கணவர் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள பிலாய் போர்கெடி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது.
குறித்த பெண் சில காலமாக கணவனை பிரிந்து வாழும் நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்து கணவனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
கணவரின் வீட்டிற்கு சென்ற பெண்ணை அறையொன்றுக்குள் பூட்டிய கணவன் உட்பட 10 பேர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதுடன் நீருக்கு பதிலாக சிறுநீரை பருக வைத்து துன்புறுத்தியுள்ளதாக அந்த பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments