யாழ். குருநகர்ப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற தீவிபத்தில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மற்றொரு வீடு பகுதியாக எரிந்து சேதமடைந்துள்ளது. குருநகர் பாங்ஷால் வீதியில் குடிமனைகள் நெருக்கமாக உள்ள பகுதியில் இன்றுமாலை இடம்பெற்ற தீ விபத்தில் இரு வீடுகள் முற்றாக எரிந்து நாசமானது. அருகில் இருந்து மற்றொரு வீட்டுக்கும் தீ பரவி அது பகுதியாக எரிந்த நிலையில் அணைக்கப்பட்டது. தகவல் அறிந்த யாழ்.மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரும் படையினரும் இணைந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
|
![]() |
0 Comments