Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள  ஓடையில் இன்று திங்கட்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஓடையில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் இந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள ஓடையிலேயே இந்த சடலம் மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பெரியகல்லாறினை சேர்ந்தவரும் சவளக்கடை,ஆறாம் கொலணியில் திருமணம் செய்துள்ளவருமான கே. கணேசபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறாம் கொலணியில்  இருந்து பெரியகல்லாறில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் பின்னர் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லையெனவும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

                

Post a Comment

0 Comments