மண்டூர் குருமண்வெளி இயந்திரப் படகுச்சேவை ஊடாக பயணிப்பது சிரமானதும் பயங்கரமான பிரயாணம் என இப்படகின் ஊடாக தினமும் பயணிக்கும் பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரயாணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மண்டூர் குருமண்வெளி துறைக்கான போக்குவரத்திற்கு பயன்படுத்தும் இயந்திரப் படகு பன்நெடுங்காலமாக பாவிக்கப்பட்டு வருவதனால் அது துருப்பிடித்து ஓட்டை விழுந்து ஆற்று நீர் படகுக்குள் புகுகின்றமையால் பிரயாணத்தின் போது நீரினை இறைத்துக் கொண்;டு (வெளியேற்றி) பிரயாணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளதுடன் பயணம் தாமதமாவதுடன் பலத்த அசௌகரியத்தினையும் ஏற்படுத்துகின்றது.
இவ்வியந்திரப் படகினை தொடர்ந்து சேலையிலீடுபடுத்த வேண்டாம் எனவும் கூடுதலான நீர் உட்புகுமாக இருந்தால் பேராபத்தினை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.எனவும் அவ்வியந்திரப் படகில் பிரயாணம் செய்வோர் தெரிவிக்கின்றனர்.
0 Comments