Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மானை வேட்டையாடிய சிறுத்தை இந்திய போட்டோகிராபர் எடுத்த அபூர்வ படங்கள்

தான்சானியா நாட்டில் உள்ள செரங்கேடி தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று பசியுடன் இரை தேடியது. அந்த நேரத்தில் வந்த மான் ஒன்றை வேட்டையாடிய சிறுத்தை,  அந்த மானை கொன்று சாப்பிடாமல் அதை அப்படியே அருகிலுள்ள மரத்தின் அருகே இழுத்து வந்து கொஞ்சம் கொஞ்சமாக மரத்தின் மீது மானை தூக்கி சென்றது.
பின்னர் மரத்தின் மேல் இருந்த தனது குட்டியுடன் சேர்ந்து மானை சாப்பிட்டது. இந்த அபூர்வ காட்சியை புதுடெல்லியை சேர்ந்த போட்டோகிராபர் அர்ச்சனா சிங் மிக  படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இது குறித்து கூறிய போட்டோகிராபர் அர்ச்சனா சிங் தன்னுடைய இத்தனை வருட போட்டோகிராபர் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு அபூர்வ நிகழ்ச்சியை தான் சந்தித்ததில்லை என்றும், இதுவொரு அற்புதமான அனுபவமாக தனக்கு இருந்தது என்றும் கூறியுள்ளார்


Post a Comment

0 Comments