ரோமானியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பாதி தலையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.ரோமானியைவை சேர்ந்த எல்விஸ் ரோமியோ லிங்குரர்(வயது 24), கட்டுமான தொழிலாளி.கடந்தாண்டு கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் அவருடைய இடது பக்க மண்டை நொருங்கியது, இதனையடுத்து அறுவைசிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் இடது பக்க மண்டையோட்டை அகற்றி அவர் உயிரை காப்பாற்றினர்.மேலும் மண்டையோடு இல்லாததால் சிறிது அடிபட்டாலும் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனவும், செயற்கை மண்டையோடு பொருத்தினால் இவர் குறையை சரி செய்து விட முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு £900 யூரோக்கள் செலவாகும் என்பதால், மக்களின் உதவியை நாடியுள்ளார் ரோமியோ.
0 Comments