திருகோணமலை அரசடி பகுதியில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றும் அருகில் உள்ள வீடு ஒன்றும் கடந்த வியாழக்கிழமை 20.03.2014 நள்ளிரவு தீயில் எரிந்துள்ளது.சம்பவம் இடம்பெற்றதை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு வந்த இராணுவத்தினர் தீ அணைப்பதற்கு உதவினர். தீ உக்கிரம் அடைய கடற்படை தளத்தில் இருந்து தீ அணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. திருகோணமலை பொலிசார் விசாரணைகளைமேற்கொண்டுள்ளனர்.
0 Comments