Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குறுமண்வெளியில் கைக்குண்டு மீட்பு


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குறுமண்வெளியில் புதன்கிழமை(19) மாலை கைக்குண்டொன்றை மீட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறுமண்வெளி காளி கோயில் வளவை மண்போட்டு நிரப்புவதற்காக பழுகாமத்திலிருந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிவரப்பட்ட மண் குவியலுக்குள் இந்தக் கைக்குண்டு காணப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

ஏற்றிவரப்பட்ட மண்ணை கோயில் வளவில் கொட்டிப் பரப்பிக் கொண்டிருந்த கைக்குண்டு இருப்பதை கண்ட ஆலய நிர்வாகத்தினர் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments