சென்னை விமானநிலையத்தில் இன்று காலை நயன்தாராவுக்கும், ஹன்சிகாவும் நேருக்கு நேர் மோதல் நடந்ததாகவும், அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிம்புவை காதலிப்பதாக ஹன்சிகா கடந்த சில மாதங்களுக்கு முன் டுவிட்டரில் கூறியிருந்தார். அதன்பின்னர் இருவரும் வெகு நெருக்கமாக பழகிவந்தனர். இந்நிலையில் பழைய காதலி நயன் தாராவுடன் நடிக்க சிம்புவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, ஹன்சிகாவின் எதிர்ப்பை மீறி அந்த படத்தில் சிம்பு நடித்தார். இதனால் சிம்பு – ஹன்சிகா உறவில் விரிசல் உண்டாகியது.
சிம்பு -நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் இது நம்ம ஆளு திரைபடத்தில் சிம்புவும், நயனும் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்ஸ்களை பார்த்து கடுப்பான ஹன்சிகா, சிம்புவுடனான உறவை முறித்துக்கொள்ள முன்வந்தார். காதலர் தினத்தில் கூட சிம்புவுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. நான் தனியாகத்தான் இருக்கிறேன். என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என ஹன்சிகா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஹன்சிகாவும், நயன்தாராவும் சென்னை விமான நிலையத்தில் நேருக்கு நேர் தற்செயலாக சந்தித்துக்கொண்டபோது ஹன்சிகா நயனை பார்த்து சிரித்திருக்கின்றார். அதற்கு நயன்தாரா பதிலுக்கு முறைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே லேசான வாய்ச்சண்டை நடந்ததாகவும், அதன்பின்னர் இருவரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் ஃபேஸ்புக் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments