மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், 1990 ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலபகுதியில் 265 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதிவுகள் பிரதேச செயலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கிழக்கு மாகாணத்திற்கான தமது முதலாம் அமர்வினை இந்த மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த விசாரணைகளின் ஒரு அமர்வு வாகரையிலும் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம்; திகதி வரையில் வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments