கல்முனைப்பிரதேசத்தில் உள்ள பிரந்திய ஊடகவியலாளர் ஒருவரின் கடை உடைக்கப்பட்டு அதற்குள் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதுடன் அவரது வீட்டிற்குள் இருந்த பணமும் படப்பிடிப்புக் கருவிகளும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை குவாரி வீதியில் இருக்கும் பிராந்திய ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் வீட்டின் புறம்பாக இருந்த சில்லறைக்கடையினை உடைத்து அதற்குள் இருந்த பணத்தினையும் பொருட்களையும் கொள்ளையடித்த பின்பு நள்ளிரவுக்கு பிறகு வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பணம் மற்றும் படப்பிடிப்புக் கருவியையும் எடுத்துக்கொண்டிருந்தபோது வீட்டில் உறங்கியவர்கள் நடமாட்டத்தினை அறிந்து யார் என கேட்டபோது தப்பி ஓடியதாகவும் அதன் பின்னர் திருட்டுச்சம்பவம் தெரியவந்ததைத் தொடர்ந்து பல இடங்களிலும் திருடர்களைத் தேடியுள்ளனர்.
இது தொடர்பில் கல்முனைப்பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கடந்த கலங்களில் இவருக்கு இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவந்தாக கல்முனைப் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments