Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு – மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக அ.சுகுமாரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த அ.சுகுமாரன் கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணக்கல்வி அமைச்சில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சைக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை சாஹிறா கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதனைப்பல்கலைக்கழகக் கலைப்பட்டம், திறந்த பல்கலைக்கழக கல்வி டிப்ளோமா, தேசிய கல்வி நிறுவக கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என்பவற்றுடன், பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.
தனது 19 வயதில் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்ட அ.சுகுமாரன், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று இ.கி.மி. வித்தியாலயத்தில் உடல்கல்வி ஆசிரியராக தனது பணிணை ஆரம்பித்திருந்தார்.
தொடர்ந்து, மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம், மட்டக்களப்பு, இந்துக் கல்லூரி என்பவற்றில் ஆசிரியராக இருந்து, இந்துக் கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றினார்.
அடுத்து மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வித்தியாலயம், வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார்.
பின் மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் ஏறாவூர் பற்று -2 கோட்டக்கல்விப் பணிப்பாளராக 2005 முதல் 2013வரை கடமையாற்றி, மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் சிறிது காலம் கோட்டக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

Post a Comment

0 Comments