மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை இன்று திங்கள் கிழமை மீள் குடியேற்ற அமைச்சினால்  மீள் குடியேற்றம் செய்யும் பணி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில்   அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது பிரதம அதிதிகளாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன்,பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ்.சாள்ஸ், மற்றும் அமைச்சின் செயலாளர் இராணுவ உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனா.; 
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின் பயனாக இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இம்மக்கள் 1985,1990 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து வாழைச்சேனை, கொழும்பு என பல்வேறு இடங்ளில் வசித்து வந்துள்ளனர். 
முதற்கட்ட நடவடிக்கையாக 45 குடும்பங்களுக்கான 3 மில்லியன் ரூபா பெறுமதியான தற்காலிக வீடுகள் அமைக்கும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 
இதில் கடந்த காலத்தில் குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் பெயர் தெரிவு செய்யப்பட்டு மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டாம் கட்ட நடவடிக்கையின்போது ஏனையோர்;களின் பெயர் விபரம் பரிசீலிக்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படும் என்று பிரதேச செயலாளர் தெரிவித்தார். 




0 Comments