நமீதா 25 கிலோ எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிறார். நமீதா 2002–ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்தார்.
2010–ல் வெளியான இளைஞன் படத்தில் வில்லியாக வந்தார். உடம்பு குண்டானதால் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. எடையை குறைத்து மீண்டும் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறி வந்தார்.
கடந்த சில மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பலன் கிடைத்துள்ளது. 25 கிலோ எடை குறைத்துள்ளார். இப்போது இளம் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இயற்கை உணவுகள் மூலம் இந்த தோற்றத்துக்கு மாறியதாக தெரிவித்து உள்ளார். மலையாளப் படமொன்றில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படம் வௌியானதும் தமிழ், தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்க்கிறார். இன்னொரு புறம் அரசியலில் ஈடுபடவும் திட்டமிட்டு உள்ளார்.
எந்த கட்சியில் சேர்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துகிறாராம். பாரதீய ஜனதா அல்லது தி.மு.க.வில் சேர்வார் என்று கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன.
0 Comments