Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இனவாத பங்காளிக்கட்சிகளின் விருப்பத்துக்கு அமையவே இலங்கையரசாங்கம் நடந்து கொள்ள முயல்கிறது

தீவி­ர­வாத போக்­குக்­கொண்ட இன­வாத பங்­கா­ளிக்­கட்­சி­களின் விருப்­பத்­துக்கு அமை­யவே இலங்­கை­ய­ர­சாங்கம் நடந்து கொள்ள முயல்­கி­றது. இதன் கார­ண­மா­கவே வட மாகாண சபை­யையும் இயங்­க­வி­டாமல் அர­சாங்கம் தடுத்­து­விட முய­லு­கின்­றது. இந்த நிலை தொட­ரு­மானால் சர்­வ­தேச சமூ­கத்­திடம் இது சம்­பந்­த­மாக கேட்க வேண்­டிய நிலை ஏற்­படும்.
பல்­வேறு உலக நாடு­களின் அழுத்தம் கார­ண­மா­கவே வட மாகாண சபை தேர்தல் நடத்­தப்­பட்­டது. வட மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட நிலையில் பல்­வேறு தடங்­கல்­களும் சிக்­கல்­களும் காணப்­படு­கின்­றன. இந்த அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை அதி­கா­ரத்தை பெறு­வ­திலோ, தரு­வ­திலோ பல்­வேறு கஷ்­டங்கள் உள்­ளன என்­பதை நாம் அறிவோம்.
நல்­லி­ணக்­கத்­துக்­கான அடை­யா­ளங்­க­ளையோ, தீர்­வு­க­ளையோ தரு­வதில் இந்த அர­சாங்கம் காட்டி வரும் அச­மந்­தப்­போக்கை உலக நாடு­களும் அறியும். நாமும் அறிவோம் எதிர்­வரும் மார்ச் மாதத்­துக்கு முன் நல்­ல­தொரு இணக்­கத்தை இந்த அரசு கொண்டு வர­வில்­லை­யாயின் அதன் எதிர்­வி­ளை­வுகள் எவ்­வாறு இருக்­கு­மென்­பதை புரிந்­து­கொள்ள முடியும். திரு­கோ­ண­ம­லையில் 13 உள்ளூர் ஆட்சி சபைகள் இருந்த போதிலும் மூன்று சபை­களே கூட்­ட­மைப்பின் கையில் உள்­ளன. ஏனை­யவை அர­சாங்­கத்தின் கையில் உள்­ளது, ஒரு காலத்தில் அந்த உள்­ளூ­ராட்சி சபை­க­ளையும் கைப்­பற்­றக்­கூ­டிய வாய்ப்பு கூட்­ட­மைப்­புக்கு இருந்­தது. ஆனால், அந்த நிலை எமக்கு இன்று இல்லை. காரணம் ஏனைய இனங்­க­ளு­டைய விகி­தா­சார அதி­க­ரிப்பு. அது மாத்­தி­ர­மல்ல யுத்தம் கார­ண­மாக குடி­பெ­யர்ந்து மீளக்­கு­டி­யே­றாமல், வாக்­காளர் இடாப்பில் பதிவு செய்­யப்­ப­டாமல், அடை­யாள அட்டை இல்­லா­மை­யினால் வாக்­க­ளிக்க முடி­யாத நிலையில் பல­வி­த­மான கஷ்­டங்­களை அவர்கள் எதிர்­நோக்கி இருக்­கின்ற கார­ணத்தின் நிமித்தம் இப்­ப­கு­தி­களின் ஆட்சி அதி­கா­ரத்தை நாம் கைப்­பற்ற முடி­யாமல் இருக்­கின்­றது. ஆகையால் ஆட்சி அதி­கா­ரத்தை நாம் கைப்­பற்­றிய இடத்­தி­லா­வது எமது சேவை­களை இயன்­ற­ள­வுக்கு செய்ய வேண்­டி­யது எமது கடமை.
சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் எமக்கு பரி­பூ­ரண அதி­காரம் வேண்­டு­மென்று கேட்­கின்றோம். அவ்­வி­த­மான கோரிக்­கையை முன்­வைக்கும் நாங்கள் ஒரு உள்­ளூ­ராட்சி நிர்­வா­கத்தை சரி­யாக நிர்­வ­கிக்­கக்­கூ­டிய தகுதி எமக்கு இல்­லாமல் இருக்­கு­மாக இருந்தால் எப்­படி எமக்கு உரிமை தாருங்கள் என்று அர­சாங்­கத்­திடம் கோர முடியும். ஆகையால் எமது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வா­கங்­களில் குறைகள், இழுக்­குக்கள் வரு­கின்­ற­போது அது எமது அடிப்­படைக் கோரிக்­கையை பாதிக்­கின்­றது. ஆகையால் உள்­ளூ­ராட்சி சபை­களை சிறந்த முறையில் நடத்த முயற்சி எடுக்­கப்­பட வேண்டும். ஒற்­று­மையும் இணக்­கப்­பாடும் வளர்த்­தெ­டுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இல்­லை­யாயின் அவப்­பேரை உள்­ளூ­ராட்சி நிர்­வா­கத்­தினர் சம்­பா­திக்க வேண்­டி­யேற்­படும். இதனால் மக்­க­ளுக்கும் கட்­சிக்கும் இனத்­துக்கும் ஏன் உறுப்­பி­னர்­க­ளுக்கும் பாதிப்பு ஏற்­படும். ஆகையால் தவிர்க்க வேண்­டி­ய­வற்றை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபையைப் பொறுத்­த­வரை எதிர்­கட்­சித்­த­லைவர் தனது கருத்தை தெளிவாகக் கூறினார். நாங்கள் ஆட்­சியை அமைக்­கா­விட்­டா­லுங்­கூட, கூட்­ட­மைப்பின் 11 உறுப்­பி­னர்கள் கிழக்கு மாகாண சபையில் இருக்­கின்­றார்கள். வேறு எந்­த­வொரு கட்­சியும் தனிப்­ப­லத்­துடன் இவ்­வ­ளவு உறுப்­பி­னர்­களை மாகாண சபையில் கொண்­டி­ருக்­க­வில்லை தனிக்­கட்­சி­யென்ற வகையில்,
எமது கட்­சிதான் கூடு­த­லான அங்­கத்­த­வர்­களை கிழக்கு மாகாண சபையில் கொண்­டி­ருக்­கி­றது. ஆளும் தரப்­பினர் நாலைந்து கட்­சி­களை சேர்ந்­த­வர்கள் என்ற உண்மை தெரி­யப்­பட வேண்டும். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்­பற்ற முடி­யாமல் போய் விட்­டது. கைப்­பற்­றி­யி­ருக்­கலாம். முஸ்லிம் காங்­கிரஸ் எம்­முடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்தால் ஆட்­சியை நாம் அமைத்­தி­ருக்­கலாம். முதல் அமைச்சர் பத­வியை முஸ்லிம் காங்­கி­ரஸை சார்ந்த ஒரு­வ­ருக்கு நாங்கள் தரத் தயா­ராக இருக்­கி­றோ­மென்று தேர்தல் முடி­வு­க­ளுக்கு பின்னும் முன்னும் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்­ள­வில்லை. அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி தனித்துக் கேட்டு 7 இடங்­களைப் பெற்று மீண்டும் அர­சாங்­கத்­துடன் இணைந்து கொண்­டார்கள். அர­சாங்கம் ஆட்­சியை அமைப்­ப­தற்கும் அரசு விரும்­பிய ஒருவர் முதல் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கும் அவர்கள் உத­வி­னார்கள். கிழக்கு மாகாண சபையில் அர­சாங்கம் ஆட்சி அமைப்­ப­தற்கு உத­விய முஸ்லிம் காங்­கிரஸ் ஆனது அதன் விளை­வு­களை இப்­பொ­ழுது அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றது.
அர­சாங்கம் 13ஆவது அர­சியல் சாச­னத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு முயற்­சித்­த­போது ஏனைய மாகாண சபை­களில் தமது பலத்தைப் பயன்­ப­டுத்தி மற்ற மாகாண சபை­களின் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றிய பொழு­தும்­கூட கிழக்கு மாகாண சபையில் அதற்கு மாறான ஒரு தீர்­மானம் முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் முன்­மொ­ழி­யப்­பட்டு கூட்­ட­மைப்­பினால் முழு­மை­யாக ஆத­ரிக்­கப்­பட்டு, கூடு­த­லாக எமது முயற்சி கார­ண­மாக அர­சாங்­கத்தின் சூழ்ச்­சிகள் முறி­ய­டிக்­கப்­பட்டு அத்­தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதன் மூலம் முஸ்லிம் காங்­கிரஸ் உண்­மை­யான நிலை­மையை புரிந்­து­கொள்­வ­தற்கு காலம் வந்­தி­ருக்­கி­றது அல்­லது வந்து கொண்­டி­ருக்­கி­றது என்று நினைப்­ப­தற்கு இட­முண்டு.
இது விடயம் சம்­பந்­த­மாக முஸ்லிம் மக்கள் சிந்­திக்க வேண்­டிய ஒரு தேவை­யி­ருக்­கின்­றது. மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்­டது, அதி­கா­ரப்­ப­கிர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. பெரும்­பான்மை மக்­க­ளுக்­கா­க ­வல்ல. இந்த நாட்டில் அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்­பட வேண்டும், மாற்றம் ஏற்­ப­டுத்­து­வ­த­னூ­டாக எல்லா இனங்­களும் அதி­கா­ரங்­களைப் பெற்று இந்த நாட்டில் சமத்­து­வ­மாக வாழக்­கூ­டிய நிலைமை உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன் வைத்­த­வர்கள் பெரும்­பான்மை இனத்தைச் சார்ந்­த­வர்கள் அல்லர். அந்த கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டது தந்தை செல்­வா­வினால். தமிழ் மக்­க­ளினால் அதிலும் விசே­ட­மாக தமிழ் பேசும் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் வாழும் தமிழ் மக்கள் மாத்­தி­ர­மல்ல, முஸ்லிம் மக்­களும் தெளிவாக புரிந்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மென்று கரு­து­கின்றோம். அதை அவர்கள் புரிந்து கொள்­ளா­விட்டால் அவர்கள் செயற்­பாடு அந்த தெளிவின் அடிப்­ப­டையில் அமை­யா­விட்டால் அவர் தமது இனத்­துக்கு பாரிய பாத­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள் என்­பதை அவர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.
எதை நாம் கேட்­கின்றோம் எங்­க­ளு­டைய பாது­காப்பைக் கேட்­கிறோம். காணியின் பாது­காப்பை கேட்­கிறோம். எமது மொழியின் பாது­காப்பைக் கேட்­கின்றோம். எமது கலா­சாரம், சமூக, பொரு­ளா­தாரம், கல்வி, சுகா­தாரம், விவ­சாயம், மீன்­பிடி ஆகிய இவ்­வி­த­மான விட­யங்­களில் அதி­கா­ரங்­களைத் தரும்­படி கேட்­கின்றோம். நாங்கள் வாழும் பிர­தே­சங்­களில் எங்­க­ளது தலை­வி­தியை நிர்­ண­யிக்­கக்­கூ­டிய அதி­காரம் எமது கையில் இருக்­க­வேண்­டு­மென்று கேட்­கிறோம். அதில் என்ன தவறு? அவ்­வி­த­மான முயற்­சிக்கு முஸ்லிம் மக்கள் தமது பரி­பூ­ர­ண­மான ஒத்­து­ழைப்பைத் தர வேண்­டாமா, கொடுக்க வேண்­டி­யது உங்­க­ளது கட­மை­யல்­லவா, அவ்­விதம் கொடுப்­பதன் மூலம் உங்­க­ளுக்கும் பல நன்­மைகள் வரு­மென்­பதை ஏற்றுக் கொள்­ளாமல் இருக்­க­லாமா?
உங்கள் தலை­வர்­களில் சிலர் அமைச்­சர்­க­ளாக, அதி­காரம் அற்ற அமைச்­சர்­க­ளாக இருந்து, பிர­யோ­ச­ன­மற்ற பத­வி­களை வகிக்­கின்ற அமைச்­சர்­க­ளாக இருந்து, அவர்கள் தமது சுக­போக வாழ்­வுக்­காக வாழ நீங்கள் உதவ வேண்­டுமா என்­பதை முஸ்லிம் மக்கள் புரிந்­து­ கொள்ள வேண்­டிய காலம் வந்து அந்த கேள்­வியை முஸ்லிம் மக்கள் தங்­க­ளிடம் கேட்க வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது.
இன்­றைய அர­சியல் நிலைமை சம்­பந்­த­மாக, எமது போராட்டம் சம்­பந்­த­மாக, ஒட்­டு­மொத்­த­மாக எமது மக்­களின் நிலை­மைகள் சம்­பந்­த­மாக சில கருத்தைத் தெரி­விக்க விரும்­பு­கின்றேன். நீங்கள் அறிந்து கொள்­வது அவ­சி­ய­மென்று நினைக்­கின்றேன். வட மாகாண சபை தேர்தல் புரட்­டாதி மாதம் நடை­பெற்­றது. பல்­வேறு அழுத்தம் கார­ண­மா­கத்தான் தேர்தல் நடந்­தது. விசே­ட­மாக சர்­வ­தேச அழுத்தம் கூடு­த­லாக இருந்­தது. தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­னாக சில தீவி­ர­வாத பேரி­ன­வா­தக்­கட்­சிகள் தேர்தல் நடப்­ப­தற்கு முன்­ப­தாக 13ஆவது சாச­னத்தை மாற்­றி­ய­மைக்க வேண்டும், இணைப்பு சம்­பந்­த­மான ஒழுங்­குகள் நீக்­கப்­பட வேண்டும், மாகாண சபை விடயம் சம்­பந்­த­மாக பாரா­ளு­மன்றம் தன்­னிச்­சை­யாக சட்டம் நிறை­வேற்ற அங்­கீ­காரம் வழங்­கப்­பட வேண்டும், சட்டம், ஒழுங்கு, காணி அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட வேண்­டும், அவ்­விதம் நீக்­கப்­பட்ட பின்­புதான் வட மாகாண சபை தேர்தல் வைக்­கப்­பட வேண்டும், அது நீக்­கப்­படும் வரை தேர்தல் வைக்­கப்­ப­டக்­கூடாது என்ற கோரிக்­கையை முன்­வைத்­தார்­கள். அவ்­வி­த­மான கரு­மங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்­கமும் சில முயற்­சி­களை எடுத்­தது. அமைச்சர் சபை சில தீர்­மா­னங்­களை எடுத்­தார்கள். அதற்­கு­ரிய சட்­டங்­களும் கொண்­டு­வர முடிவு எடுக்­கப்­பட்­டது. அந்த சூழ­லில்தான் த.தே. கூட்­ட­மைப்பு பாரதப் பிர­த­ம­ரையும் ஏனைய அமைச்­சர்­க­ளையும் அதி­கா­ரி­க­ளையும் சந்­தித்­ததன் கார­ண­மாக இந்­தி­யாவின் முயற்சி கார­ண­மாக அந்த முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கைவி­டப்­பட்­ட­தென்று நான் கூற­மாட்டேன். ஆனால், அவர்கள் விரும்­பிய வேகத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.
அதன்­பின்பு தான் பல நாடு­களின் அழுத்தம் கார­ண­மாக மாகாண சபை தேர்தல் நடந்­தது. நமது மக்கள் எல்லா மாவட்­டங்­க­ளிலும் பல­வி­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் இரா­ணு­வக்­கெ­டு­பி­டியின் மத்­தியில் வற்­பு­றுத்­தலின் மத்­தியில் வட­மா­காண மக்கள் அந்தத் தேர்­தலை எதிர்­நோக்­கி­னார்கள். இது விடயம் சம்­பந்­த­மாக சார்க் நாட்­டி­லி­ருந்து வந்த கண்­கா­ணிப்­பாளர்கள், பொது­ந­ல­வாய நாடு­களின் கண்­க­ணிப்­பா­ளர்கள், உள்­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்கள் ஆகி­யோரின் அறிக்­கை­களை படித்துப் பார்த்தால் போதிய ஆதாரம் இருக்­கின்­றது. என்ன வித­மாக இரா­ணுவம் வடக்கில் செயற்­பட்­டது என்­பதை நிரூ­பிக்க. அப்­படி இருந்­தும்­கூட மக்கள் அமை­தி­யாக, உறு­தி­யாக செயற்­பட்டு வாக்­க­ளித்­ததன் நிமித்தம் 38 இடங்­களில் 30 இடங்­களை த.தே. கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யது.
கிழக்கு மாகா­ணத்­தில்­கூட 11 பேர் எமது உறுப்­பி­னர்கள். கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் முதல் அமைச்சர் உண்­மையில் தெரிவு செய்­யப்­பட்­டாரா? அல்­லது தெரிவு செய்ய வைக்­கப்­பட்­டாரா என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கி­றது. இதி­லி­ருந்து தமிழ் மக்­க­ளு­டைய சிந்­த­னையை, அவர்­க­ளது அர­சியல் எதிர்­பார்ப்பை எல்­லோரும் தெரிந்­து­கொள்ள வேண்­டிய ஒரு தேவை இருக்­கி­றது. இதை எவரும் மறுக்க முடி­யாது. இரா­ணுவக் கெடு­பி­டிகள் இல்­லாது இருந்தால் வடக்கின் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வ­து­கூட சந்­தே­கத்­துக்­குரிய விட­ய­மாக இருந்­தி­ருக்கும்.
தேர்தல் முடிந்­தது. நமது முதல் அமைச்சர் சத்­தியப் பிர­மாணம் செய்தார். வட மாகா­ணத்தில் எமது முதல் அமைச்சர் ஒரு சாதா­ரண மனி­த­னல்ல. ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர். தற்­பொ­ழுது மாகாண சபை இயங்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. ஆனால், இன்னும் சபை முறை­யாக இயங்­கக்­கூ­டிய சூழல் உரு­வா­க­வில்லை, முதல் அமைச்­ச­ருக்கும் அமைச்சர் சபைக்கும் தேவை­யான அதி­கா­ரிகள் அவர்­களின் விருப்­பத்தின் அடிப்­ப­டையில் இன்னும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. பல­வித நடை­முறைச் சிக்­கல்கள், தேவை­யற்ற சிக்­கல்கள் தற்­பொ­ழுது ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக முதல் அமைச்சர் அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­கொண்டு அவற்றை தீர்ப்­ப­தற்கு முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கிறார். அவை விரைவில் தீர்க்­கப்­ப­டு­மென்று எதிர்­பார்க்­கின்றோம்.
இந்த மாகாண சபைகள் எவ­ரு­டைய தய­விலும் இயங்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாங்கள் எதிர்­பார்ப்­பது தற்­பொ­ழு­துள்ள சட்­டத்தின் அடிப்­ப­டையில் 13 அ. சாச­னத்தின் அடிப்­ப­டையில் மாகாண சபை சட்­டத்தின் அடிப்­ப­டையில் இயங்க வேண்டும். அந்த ஒழுங்கு எமக்கு ஒரு முழு­மை­யான தீர்­வாக அமை­யாமல் இருக்­கலாம். அது விடயம் சம்­பந்­த­மாக நாம் பேசத்­தயார். நியா­ய­மான தீர்வை ஏற்­ப­டுத்த நாம் தயார். ஆனால், அவ்­வி­த­மான ஒரு தீர்வு வரும் வரையில் இந்த மாகாண சபைகள் மக்­களின் ஜன­நா­யக முடிவின் அடிப்­ப­டையில் அந்த சட்­டங்­க­ளுக்கு அமைய செயற்­பட வேண்டும். அதை எவ­ராலும் தடுக்க முடி­யாது என்­ப­துதான் எங்கள் நிலைப்­பாடு ஆகும். வட­மா­காண சபை இயங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டாமல் இருக்­கு­மாக இருந்தால் அதன் விளக்கம் என்­ன­வென்றால் தீவி­ர­வாத அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சிகள் முன்­வைத்த கோரிக்­கையின் அடிப்­ப­டையில் மாகாண சபை­யினை நடாத்­தாமல் இருக்­காமல் சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்தம் கார­ண­மாக அமைந்த மாகாண சபை. தீவி­ர­வாத சக்­தி­களின் விருப்­பத்தின் அடிப்­ப­டையில் இந்த மாகாண சபையை இயங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தற்­பொ­ழுது தடை­யாக இருக்­கின்­றது. அதன் காரணம் என்­ன­வென்றால் மக்­க­ளு­டைய ஜன­நா­யக முடிவு வீசப்­பட்டு, நிரா­க­ரிக்­கப்­பட்டு மக்கள் முடி­வுக்கு மாறாக தீவி­ர­வாத சக்­தி­களின் விருப்­பத்தின் அடிப்­ப­டையில் மத்­தி­ய­ர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இந்த நிலைமை வெளிக்­கொண்டு வரப்­பட வேண்டும். அவ்­வி­த­மாக இந்த நாட்டில் ஆட்சி நடை­பெ­று­மாக இருந்தால் நாட்டில் ஜன­நா­ய­கத்­துக்கு இந்த நாட்டில் என்ன மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யான ஆட்சி நடை­பெ­று­மாக இருந்தால் சிறு­பான்மை மக்கள் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் கௌர­வத்­து­டனும் வாழ முடியும் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் இருக்­கின்­றது. இக்­கேள்­வி­யைத்தான் நாம் சர்­வ­தேச சமூ­கத்­திடம் கேட்போம். நாங்கள் பொறு­மை­யாக இருக்­கின்றோம். இப்­பிரச்­சி­னை­களைத் தீர்க்க வடக்கின் முதல் அமைச்சர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார்.
இன்னும் இரண்டு நாட்­களில் இதற்கு நல்­ல­தொரு முடிவு வரா­விட்டால் சர்­வ­தே­சத்­திடம் இந்தக் கேள்­வியை பகி­ரங்­க­மாக கேட்க வேண்­டிய நிலை ஏற்­படும். அதி­கா­ரத்தை இந்த நாட்டில் பெறு­வதும் பயன்­ப­டுத்­து­வதும் இல­கு­வான விட­ய­மல்ல என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று எமது பிரச்­சினை முற்­றாக எப்­பொ­ழுதும் இல்­லாத அள­வுக்கு சர்­வ­தேச மய­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 2012, 2013 ஆம் ஆண்டு இரு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்தத் தீர்­மா­னத்தில் தெரி­விக்­கப்­பட்ட முக்­கி­ய­மான விட­யங்கள் அமுல் படுத்­தப்­ப­ட­வில்லை. நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு அண்­மையில் விஜயம் செய்தார் வாய் மூலம் ஒரு அறிக்­கையை அவர் சமர்ப்­பித்து இருக்­கின்றார். 2014 ஆம் ஆண்டின் மனித உரிமைப் பேரவை அமர்வில் இந்த விடயம் எடு­ப­ட­வி­ருக்­கின்­றது. ஆலோ­சிக்­கப்­படும் சில முடி­வுகள் எடுக்­கப்­படும்.
பொறுப்­புக்­கூறும் விடயம் சம்­பந்­த­மாக இலங்­கை­ய­ரசு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கையில் இது­வரை ஈடு­ப­ட­வில்லை. பொறுப்­புக்­கூறும் விடயம் சம்­பந்­த­மாக இலங்­கை­ய­ர­சாங்கம் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கையை எடுக்கா விட்டால், செயற்­ப­டா­து­விட்டால் ஒரு சர்­வ­தேச விசா­ரணை தவிர்க்­கப்­பட முடி­யாத ஒரு­வி­ட­ய­மாக மாறும் என்ற கருத்து பகி­ரங்­க­மாகக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.
ஐ.நா. சபையின் அதி­கா­ரிகள் யுத்தம் நடை­பெற்ற கால கட்­டத்தில் இறுதிக் காலத்தில் தங்கள் ஆணையை முறை­யாகப் பயன்­ப­டுத்­த­வில்லை. மனி­தா­பி­மான மக்கள் பாது­காப்பு சம்­பந்­த­மான ஆணையை தாம் முழு­மை­யாக பயன்­ப­டுத்­த­வில்­லை­யென்­பது அவர் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்­ற­மாகும். வேறு எவ­ரா­லு­மில்லை. ஐ.நா. சபையின் உள்­ளே­யி­ருந்து அந்தக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அது விடயம் சம்­பந்­த­மாக தற்­பொ­ழுது விசா­ரணை நடை­பெற்று அக்­க­ருத்தை ஏற்­றுக்­கொண்ட ஒரு அறிக்கை வெளிவந்­தி­ருக்­கின்­றது.
அது விட­ய­மா­கத்தான் எவ்­வி­த­மாக செயற்­பட வேண்­டு­மென்­பதை அறி­வ­தற்­காக செய­லாளர் நாயகம் இன்­னு­மொரு குழுவை நிய­மித்­தி­ருக்­கின்றார். தனக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக.
இந்த வாரம் இலங்­கைக்கு ஒரு அமெ­ரிக்கத் தூதுக்­குழு விஜயம் செய்­தி­ருக்­கி­றது. கடந்த வெள்ளிக்­கி­ழமை, (06-12-2013) அவர்கள் திரு­ம­லைக்கு வந்­தி­ருந்­தார்­கள். நானும் சந்­தித்தேன். பொது­ந­ல­வாய மாநாடு நடை­பெற்­றது. பல தலை­வர்கள் தங்­க­ளு­டைய கருத்­து­களை தெளிவாகக் கூறி­யி­ருந்­தார்கள். பாரதப் பிர­தமர் எதிர்ப்பின் கார­ண­மாக மாநாட்­டுக்கு வர­வில்லை. இந்­திய நிதி­ய­மைச்சர் சிதம்­பரம் அவர்கள் சமீ­பத்தில் கூறி­யி­ருக்­கிறார் இந்­தியா ஒரு­போதும் இலங்கைத் தமி­ழர்­களை கைவி­டாது. 13ஆவது சாசனம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென அவர் கூறி­யி­ருக்­கிறார்.
இலங்­கைக்கு வருகை தந்த இங்­கி­லாந்துப் பிர­தமர் கெமரூன் வட மாகா­ணத்­துக்கு சென்று முதல் அமைச்­சரை சந்­தித்­துள்ளார். நாங்கள் சிலரும் இந்தச் சந்­திப்பில் பங்­கு­பற்­றினோம்.
இங்­கி­லாந்தின் வெளிவி­வ­கார அமைச்சர் விஜயம் செய்­த­போது சந்­தித்து உரை­யா­டி­யி­ருக்­கின்றோம். இந்­திய வெளிவி­வகார அமைச்சர், வெளிவி­வ­கார செய­லாளர் இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது அவர்­க­ளையும் சந்­தித்து உரை­யா­டினோம். கன­டா­வி­லி­ருந்து வந்த குழு யாழ். சென்று முதல் அமைச்­சரை சந்­தித்து இருக்­கின்­றது. இங்­கி­லாந்தின் பிர­தமர் கூறி­யி­ருக்­கின்றார். எதிர்­வரும் வருடம் பங்­குனி மாதத்­துக்கு முன்­பாக இலங்­கையில் நம்பத்தக்க விசாரணை நடைபெறாவிட்டால் ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டுமென்று கூறியிருக்கின்றார். அது விடயம் சம்பந்தமாக நாங்கள் முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா வந்திருந்தார். இலங்கையரசு தென்னாபிரிக்காவின் உதவியை அவரிடம் கோரியிருந்தது. அவர்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் உதவும் படியாக ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவ்வித­மான செய்தியை ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டிருக்கின்றது. தென்னா­பிரிக்காவின் ஜனாதிபதியை நாங்களும் சந்தித்தோம். திருப்தியான பேச்சுவார்த்தை எங்களுக்கிடையில் நடைபெற்றது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணுவதற்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். அது விடயம் சம்பந்தமாக எமது கருத்தை அறிய விரும்பினார்கள். அவர்களுக்கு நாம் கூறினோம் உங்களது பங்களிப்பு பரிபூரணமான பங்களிப்பாக இருக்க வேண்டும். மோதல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அறியப்பட வேண்டும். தற்போது நமது பிரதேசங்களில் நடைபெறும் கெடுபிடிகள் இல்லாமல் செய்ய வேண்டும். மாற்றியமைக்கப்பட வேண்டும். விசேடமாக காணி, இராணுவ மயமாக்கல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும். எங்கள் மக்களின் காணிகள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
பொறுப்புக்கூறும் விடயத்தில் உண்மை அறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படை­யில் தீர்வு ஏற்பட வேண்டும். நாம் ஏற்றுக்கொண்ட தீர்வு நிரந்தரமான தீர்வாக இருக்க வேண்டும். அது முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு சர்வதேச உத்தரவாதம் இருக்க வேண்டும். இவ்விதமான முழுமையான முயற்சியில் தாங்கள் ஈடுபடுவதாக இருந்தால் அதை நாம் வரவேற்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால்? இலங்கை அரசாங்கம் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்காக அவர்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதாக இருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக்கூறியிருந்தோம்.

Post a Comment

0 Comments