Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாரண மாணவர்களுக்கான அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மட்/பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் கடந்த 05.12.2013 அன்று வியாழக்கிழமை அங்கத்துவ சின்னத்திற்கான சாரண பயிற்சிகளை முடித்துக் கொண்ட  2ஆம் குழு மாணவர்களிற்கு பாடசாலையின் அதிபர் தி.கிருபாகரன் தலைமையில்  பாடசாலையின் சாரண ஆசிரியர் சு.ரவிசங்கர் அவர்களினால் அங்கத்துவ சின்னம் சூட்டப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாரண உதவி மாவட்ட ஆணையாளர் வ.சுப்பிரமணியம் அவர்களும், மட்/கன்னன்குடா மகாவித்தியாலய சாரண ஆசிரியர் கு.பிரபாகரன் அவர்களும், மட்/மாவடி முன்மாரி பாடசாலையின் சாரண ஆசிரியர் பி.சூரியகுமார் அவர்களும், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்,பழைய மாணவர்கள் , ஏனைய சாரண மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments