Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அநுராதபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு!

அநுராதபுரம், திஸா வாவிக்கு அருகிலுள்ள வனப்பகுதியிலி ருந்து மனித உடற்பாகங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள் ளன. காட்டுக்கு விறகு வெட்டுவதற்கு சென்றவர், பொலி ஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் இந்த மனித உடற்பாகங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அரு கிலிருந்த ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மனித எச்சங்கள் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் வைத்திய பரிசோதனை என்பவை இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments