தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக உறுப்பினர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சங்கத்தில் புகார் கொடுத்து அதன்மூலம் அந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைப் பெறுவார்கள்.
ஆனால் இங்கே சங்கத்தில் தலைவரே ஒரு புகாரை உறுப்பினர்கள் மத்தியில் சொல்லி இதற்கு நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் என்று கேட்டது செம காமெடியான மேட்டராகிப் போயிருக்கிறது.
அவரின் இந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக பி.ஆர்.ஓக்கள் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், முகம் தெரியாதவர்களுக்கு கூட வெளியில் தெரியாமல் பண உதவிகளைச் செய்பவர் பிரகாஷ்ராஜ். அப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகர் மீது இப்படி அபாண்டமாக புகார் சொல்கிறாரே..? என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம். ஆனால் உண்மை என்ன என்று விசாரித்தால் அந்த சமாச்சாரம் வேறு மாதிரியாக உள்ளது. டைமண்ட் பாபு எந்தப் படத்தில் வேலை செய்தாலும் அவர் அந்தக் கம்பெனியில் சம்பளம் கேட்கவே மாட்டார் என்று கருத்து பரவலாக உள்ளது. நடிகர் பிரபுவும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் கூட ஒரு கூட்டத்தில் “இதுவரை டைமண்ட் பாபு எங்களிடம் சம்பளமே வாங்கியதில்லை, அவர் ரொம்ப நல்லவர்” என்று பெருமையோடு பேசினார்கள்.
அவரின் இந்த புகாரைக் கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ் வருத்தப்பட்டதோடு மட்டுமில்லாமல் டைமண்ட் பாபுவுக்கு சேர வேண்டிஅய் சம்பள பாக்கியையும் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறாராம்.
0 Comments