அம்பாறை – பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச செயலக அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பொத்துவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை அமைச்ச்ர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விவசாயிகள் சட்டவிரோதமாக வேளாண்மையில் செய்கையில் ஈடுபடுவதாகவும், முறையான அனுமதிப் பத்திரம் இல்லாதமையினாலும் பொத்துவில் கறங்கோவில் பகுதியிலுள்ள 502 ஏக்கர் நிலப்பரப்பில் எதிர்வரும் காலங்களில் வேளாண்மை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதன்போது கறங்கோ பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு அதிகாரபை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில், இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் கறங்கோ பகுதியிலுள்ள 502 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை இந்த முறை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதிக்குள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுதரப்படும் எனவும் அவர் இதன்போது உறுதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments