Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் பால்மா தட்டுப்பாடு

வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் மாயமாக மறைந்த நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் பால் மா உற்பத்திப் பொருட்கள் இன்னமும் கடைகளுக்கு வந்து சேராததால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குழந்தைகள் உள்ளோரும். நோயாளிகளும் வழக்கமாக தாங்கள் பயன்படுத்தும் பால் மா கிடைக்காததால் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இது குறித்து வியாபாரிகளிடம் வினவியபோது தங்களுக்கான விநியோகம் தாமதமாவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதேவேளை சில வியாபார நிலையங்களில் தங்களது நிரந்தர வாடிக்கையாளாகளுக்கு மட்டும் இரகசியமாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் இப்பகுதி நுகர்வோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அத்துடன் வியாபாரிகள் வரவு செலவு திட்டத்தின் பின் பால்மா விலை அதிகளவு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பால்மா வகைகளை பதுக்கி வைத்து செயற்கையான தட்டப்பாட்டை அவர்கள் ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே இவ்விடயத்தில் விற்பனையாளர்களும் பாவனையாளர்களும் முரண்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என்ற அரசு அறிவித்துள்ள போதும் பால் மாவிற்கு தட்டப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments