Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மதத் தலங்களில் திருட்டு! நல்லூர் வடக்கு ஆலயத்திலும் திருட்டு

யாழ். நல்லூர் வடக்கு ஶ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆலயத்தின் மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு ஆலயத்திலிருந்த பிள்ளையார் சிலை உள்ளிட்ட மேலும் பல பெறுமதி வாய்ந்த வெண்கல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை ஐந்து மணிக்கும் இன்று காலை ஆறு மணிக்கும் இடையில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments