இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் யான் லொக்கி ஆகிய இருவருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றியும் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடனும் வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: