இந்தியா வந்திருந்த போது தீபாவளிப் பண்டிகை குறித்து அறிந்து கொண்ட ஒபாமா மற்றும் அவரது மனைவி மிக்சேல் ஒபாமா, அதனை இந்தாண்டு தங்கள் வெள்ளை மாளிகையில் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தனர். அதன் படி, மிச்சேல் ஒபாமாவின் தலைமையில் கொண்டாடப் பட்ட தீபாவளி விழாவில் அந்நாட்டின் எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புத்தாடை அணிந்து….
வெள்ளை மாளிகையில் தீபாவளி விழா கொண்டாடப் படுவது இதுவே முதல்முறை ஆகும். நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய வம்சாவழி ஆடைவடிமைப்பாளர் தயாரித்த புத்தாடையை அணிந்து கலந்து கொண்டார் மிக்சேல் ஒபாமா.

இன்னிசைக் கச்சேரி….
அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘கோல்ட் ஸ்பாட் பேண்ட்’ என்ற இந்திய இசை மற்றும் நடனக் குழுவினர் பாலிவுட் இசையை முழங்க வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் கோலாகல தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

கலகலப்பான விழா….
கலகலப்பாக நடைபெற்ற அந்த விழாவில் பாலிவுட் இசைக்கு நடனமாடினார் மிக்சேல். இது குறித்து அவர் கூறியதாவது, ‘பாலிவுட் இசைக்கு என்னாலும் நடனம் ஆட முடியும் என்று நினைக்கிறேன். ஆனாலும், இவர்களை (இசை குழுவினர்) போல் ஆட முடியாது. இன்று மதியம் கொஞ்சம் பாலிவுட் நடனப் பயிற்சி பெற போகிறேன்’ என்றார்.

நடனமாடிய மிக்கேல்….
சில நடன அசைவுகளுக்கு போஸ் கொடுத்த மிக்சேல், விழாவுக்கு வந்திருந்த முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறுவர், சிறுமியருடன் நடனம் ஆடி மகிழ்ந்தார்.
இனிமையான தருணம்…
மேலும், இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது, தீபாவளியை இந்தியர்கள் மகிழ்வுடன் புத்தாடை அணிந்து கொண்டாடுவதைக் கண்டே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், வெள்ளை மாளிகையில் இந்த பகுதியில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த தருணம் மிகவும் இனிமையானது’ எனவும் மிக்சேல் தெரிவித்தார்.

0 Comments