மறைந்த பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் என்று புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா புற்றுநோய் பாதிப்பால் 2006ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எம்.கிருஷ்ணன் நாயர் என்பவர் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகைக்கு இருந்த நோய் குறித்தும் அவரின் உயிரை காப்பாற்ற விலை உயர்ந்த மருந்துகளை வாங்கித் தர அவரின் அறக்கட்டளை முன்வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதனால் தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவித்யா பெயரிலான அறக்கட்டளையை, மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார்.
அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகையில், வெளியாகியுள்ள தகவல் பொய். நாங்கள் மருந்து வாங்கிக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறுவது உண்மையில்லை என்றும் மருந்தை மாற்றினால் பக்கவிளைவுகள் விபரீதமாக இருக்கும் என ஸ்ரீவித்யா தான் மறுப்பு தெரிவித்து வந்தார் எனவும் கூறியுள்ளார்.
0 Comments