சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு விசேட அதிரடிப்டையினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய வளாகத்தினை துப்பரவு செய்யும் போது இந்தக் கைக்குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தனியாருக்கு சொந்தமான வீட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் இயங்கிவருகின்ற நிலையில் பொலிஸ் நிலையவளாகம் துப்பரவு செய்யப்பட்ட போது குறித்த கைக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
0 Comments