Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இனி யாரும் வரக்கூடாது – கடும் கோபத்தில் நயன்தாரா


ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று சிம்பு நயன்தாரா தீவிரமாக காதலித்தபோது அந்த செய்தியை இருவருமே மறுத்தனர். பின்னர் எந்த இடம் சென்றாலும் ஒன்றாகவே இணைபிரியா ஜோடிகளாக சுற்றி வலம் வந்தனர். 


அப்புறம் என்ன நடந்ததோ யார் வீட்டு கண் பட்டுதோ இவங்க காதல் டமாராகி போனது. சிம்புவிடம் இருந்து பிரிந்த நயனுக்கு தோள் கொடுத்து ஆதரவு அளித்தார் மாஸ்டர் பிரபுதேவா. இவர்களின் பழக்கம் காதலாகி, கல்யாணம் வரை சென்றது. இதற்காக தனது மனைவியை விவாரகத்தும் செய்தார் பிரபுதேவா. நயன் தாராவும் தன் பங்குக்கு கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். இதுவரைக்கும் எல்லாமே ஒழுங்கா போயிட்டு இருந்துச்சு மறுபடியும் நயனின் வாழ்க்கையில் காதல் என்பது “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போயிடுச்சே” கணக்கா மாறியது. பிரபு தேவாவும், நயனும் பிரிந்தார்கள். 

இப்படி நயனின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் பத்திரிக்கை, மீடியா என்ற கத்தியின் மூலம் என் வாழ்க்கை திரையை கிழித்து விட்டார்களே என யார் மேலேயோ இருந்த கோபத்தை மீடியா மேல் காட்டுகிறாராம். இனி என்னை எந்த நிருபரும் வந்து சந்திக்க கூடாது என அவர் நடித்து வரும் படங்களின் இயக்குநரிடன் சொல்லிவிடுகிறாராம். இத்தனைக்கும் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயனின் வேடம் பத்திரிக்கை நிருபராம்.

Post a Comment

0 Comments