கன்னன்குடா பிரதான விதியில் உள்ள கன்னன்குடாப் பாலம் திருத்தப்படாமையினால் பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இரண்டு தடவைகள் சேதமான நிலையில் தற்காலிகமாக மெற்பரப்பிற்கு கொங்றீற் இடப்பட்ட நிலையில் மீண்டும் சேதமடைந்துள்ளது. இதனால் இவ் வீதியால் செல்லம் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் மேற்பரப்பு எப்போதும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதனால் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு கொத்துக்களை இட்டு அடையாளப்படுத்தியுள்ளனர். வாகனங்கள் செல்வதில் அபாயம் உள்ளதால் வாகனச் சாரதிகள் அச்சம் தெரிவிப்பதுடன் மாற்று வீதியினைப் பாயன்படுத்துவதாகவம் தெரிவிக்கின்றனர்.
0 Comments