Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சோனியாவும் வலியுறுத்தினார்: மன்மோகன் சிங் இலங்கை வரமாட்டார்?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இதே கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் என தெரிகிறது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இலங்கை அரசிடம் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் இலங்கை செல்லக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.



Post a Comment

0 Comments