பல்லு முளைக்கிற வயசுல பால்புட்டி தேடுனா ஊரே சிரிக்கும். ஆனால் இது புரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. என்னவாம்? கிட்டதட்ட கல்யாண வயசை தாண்டிவிட்டார் அவர். சினிமாவிலும் அவருக்கான நாற்காலி பிடுங்கப்பட்டு விட்டது. இந்த நேரத்தில் இவருக்கும் அவருக்கும் லவ்வாமே என்று ஊர் பேசினால் என்னாகும்? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது அவரை பொறுத்தவரை.
யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம் குமார் இப்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஸ்ரேயாதான் நடிக்கணும் என்று வேண்டி விரும்பி அவரை அழைத்துக் கொண்டாராம். த்ரில்லர் வகை படங்களுக்கு பெயர் போனவர் விக்ரம் குமார். இந்த படத்தில் பெரிய பெரிய கண்களுடன், திகில் சிரிப்புடனும் ஒரு அழகி தேவைப்பட அவரது மனக் கண்களுக்கு பளிச்சென வந்து போனவர் ஸ்ரேயாதானாம். ஆனால் இந்த காரண காரியத்தை அலசுகிற நிலைமையிலா இருக்கிறது கிசுகிசு எழுத்தாளர் சங்கம்?
இவருக்கும் அவருக்கும் லவ். அதனால்தான் மார்க்கெட்டில் டல்லாகி போயிருக்கும் ஸ்ரேயாவுக்கு தேடிப்பிடித்து வாய்ப்பு தந்திருக்கிறார் என்று கண் காது மூக்கு போன்ற ஐட்டங்களை ஃபிக்ஸ் பண்ணி இருவருக்கும் காதல் என்று கிளம்பிவிட்டு விட்டார்கள்.
ஒருவேளை இருக்குமோ…?
0 Comments