Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்த் தேசியத்தின் தளத்தை வலுப்படுத்த மொரீஷியசில் நடைபெறும் மாநாடு – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

தமிழ்த் தேசியத்தின் தளத்தை உலகளாவிய ரீதியில் வலுப்படுத்த மொரீஷியசில் “புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு” எனும் தலைப்பில் மூன்று நாட்கள் தமிழீழம், தமிழ்நாடு உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து மொரிசியஸ் நாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் அனுசரணையுடன் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடாத்துகிறது.
இன்றைய நாளில் மாவீரர்களுக்கான மற்றும் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவு தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசியர் ராமசாமி மற்றும் பல அரசியல் ஆய்வாளர்கள் ,தமிழ்த் தேசிய ஊடகவியாளர்கள் , தமிழீழ ஆதரவாளர்கள் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் .
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக கனடாவில் இருந்து மோகன் ராமகிரிஷ்ணன் , பிரான்சில் இருந்து திரு திருட்சோதி , நோர்வேயில் இருந்து ஸ்டீவன் புஷ்பராஜா ஆகியோர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள்.
MORIS 06

Post a Comment

0 Comments