Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழில் இளம் பெண்ணை கடத்த முயன்ற தென்னிலங்கை இளைஞர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்!

தனிமையில் வந்த இளம் பெண்ணொருவரை வேனில் கடத்த முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று முற்பகல் 11.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரின் திருமண வைபவத்துக்குச் நடந்து சென்றுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, இராசாவின் தோட்டத்து சந்தியில் வைத்து வேனில் வந்த இளைஞர்களால் கடத்த முற்பட்ட போது குறித்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்துள்ளதோடு வேனையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மடக்கி பிடிக்கப்பட்ட இரு இளைஞர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments