Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை அரச படைகள் போரின் போது மிகக் கொடூரமான மீறல்களைப் புரிந்தன: - ஐ நா மீது கனேடிய ஊடகம் காட்டம்!

யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை என்பது வெளிப்படடை என்று ரொரன்ரோ ஸ்ரார் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரோசி டி மென்னோ எழுதியுள்ள இலங்கை பற்றிய கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கண்ணீர்த்துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே இலங்கை. இங்கு இடம்பெற்ற போரின் போது விழுந்த கண்ணீர்த்துளிகள் எண்ணுக்கணக்கற்றவை. அதே போன்று போரின் போது உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையும் அளவற்றது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது அதில் அகப்பட்டுத் தவித்த மக்களைப் பாதுகாக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபை, போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது 40,000 தொடக்கம் 70,000 வரையான பொது மக்கள் போரில் படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. 2006 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின ரால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இறுதிக்கட்ட போரில் தமிழ்மக்கள் கொல்லப்படுவதை தடுக்க இலங்கை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி இலங்கை அரச படைகள் போரின் போது மிகக் கொடூரமான மீறல்களைப் புரிந்தன. போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு மீறல்களை அந்தப் படைகள் மேற்கொண்டன.
செறிவான எறிகணை வீச்சுக்கள், அப்பாவி மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள், மனிதாபிமான தொடரணிகள் மீதான தாக்குதல்கள் என எவ்வித பாகுபாடுமின்றி இலங்கை படைகள் தாக்குதல்களை மேற்கொண்டன.
போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 'நம்பகமான' விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவிப்பிள்ளை அறிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கை அரசு உரிய முறையில் விசாரணையை மேற்கொள்ள முன்வராவிட்டால் அனைத்துலக சமூகமானது தனது சொந்த விசாரணைப் பொறி முறைகளை உருவாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் எனவும் நவிப்பிள்ளை அறிவித்திருந்தார்.
1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது.
ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குஉரியது என அந்த ஊடகம் தனது பந்தியில் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments