Home » » இலங்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும் செய்தி சேகரிப்பை கைவிடோம்! - சனல்4 பணிப்பாளர் கலம் மக்றே உறுதி.

இலங்கையில் எத்தகைய தடைகள் வந்தாலும் செய்தி சேகரிப்பை கைவிடோம்! - சனல்4 பணிப்பாளர் கலம் மக்றே உறுதி.

எத்தகைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தடைகள் வந்தாலும், இலங்கை நிலைமை பற்றிய செய்தி சேகரிப்பதை தாம் கைவிடப் போவதில்லை என்று சனல்-4 பணிப்பாளர் கெலும் மக்றே கூறினார். வடக்கிற்கு செல்ல முயன்ற போது, அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட, அவரிடம், வடக்குக்கு செல்லப் போகின்றீர்களா அல்லது இலங்கையை விட்டு வெளியேறப் போகின்றீர்களா என கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

"எமது தொழிலை எவ்வாறு செய்வது என எமது அணி பேசிவருகிறது. நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல முடியுமென எமக்கு கூறப்பட்டது. நாம் பயணம் செய்த புகையிரதம் இரண்டு மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. நாம் ரயிலில் இருப்பதுபற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு அறிந்தனர் என்பதையிட்டு அரசிடம் விளக்கம் கேட்கவுள்ளோம். இவ்வாறான நடத்தை பொதுநலவாயத்தின் கோட்பாடுகளுடன் ஒத்ததாக இல்லை. பத்திரிகை சுதந்திரம் இருப்பது அவசியம். இலங்கையில் நல்ல ஊடகவியலாளர்கள் உள்ளனர் ஆனால் அவர்கள் கூடுதல் சுயாதீனத்துடன் செயற்பட வேண்டும்" என்றும் மக்றே கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |