Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெறாது.

0

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெறாதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் தெரிவித்தார்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன -
“கடந்த வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி தலைமையல் மத்திய செயற்குழு கூடியது.  அடுத்து வருடம் நடாத்தவுள்ள மேல், தென் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடினோம். அடுத்த வருடம் பொதுத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடாத்துவதுவது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனவே அடுத்த வருடம் அதாவது 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெறாது. 2016 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதிக்கு பதவி வகிக்க முடியும்”

Post a Comment

0 Comments