2009 ஆண்டு முதல் 2011 வரையான காலப்பகுதியில் 75 ஆயிரத்து 777 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
நாடாளுமன்ற இன்றைய அமர்வின் போது இடம் பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலழிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பெற்றோர் பி;ள்ளைகளை பிறரிடம் பொறுப்பித்து தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளுக்கு செல்வதினாலே துஸ்பிரயோகங்கள் இடம் பெறுவது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய திஸ்ஸ கரலியத்த
2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியி;ல மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 46 சம்பவங்களும் கம்பஹா மாவட்டத்தில் 41 சம்பவங்களும், பதுளை மாவட்டத்தில் 10 சம்பவங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 சம்பவங்களும், யாழ்ப்பாணத்தில் இரு சம்பவங்களும் மாத்தளை மாவட்டத்தில் 16 சம்பவங்களும்
நுவரெலியா மாவட்டத்தில் 5 சம்பவங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எந்த பதிவுகளும் மேற்க்கொள்ளப்படவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 748 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் சிறுமிகள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 731 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடடார்.
0 Comments