டிக்கோயா புளியாவத்தை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளியாவத்தை பிளிங்கேனி பகுதியில் காணி பிரச்சினையால் இன்று முற்பகல் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலில் காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பெண்களும் பத்து ஆண்களும் அடங்குகின்றனர்.
கற்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டு இவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வுட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments