வடமராட்சிக்கிழக்கு,முல்லைத்தீவில் கடல் அலைகளின் தாக்கம்-பலகோடி பெறுமதியான படகுகள் நாசம்!
இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கின் கடற்கரையோரத்தில் கடல் அலைகளின் தாக்கம் பெரிய அளவில் இருந்ததனால் கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பலரின் கடல் தொழில் உபகரணங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கான மீனவர்களின் படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள், வலைகள் என்பன அடித்து செல்லப்பட்டுள்ளது, இன்று காலையில் சில படகுகளை மீனவர்கள் மீட்டுள்ள போதிலும் அவையுடைந்து காணப்படுகின்றது, அத்துடன் வெளியிணைப்பு இயந்திரங்கள் ஏதையும் பாவிக்க முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் பல படகுகள் தேடியும் இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்துடன் இந்த அனர்த்தத்தில் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த அனர்த்தத்தின் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துகள் அழிவடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடலில் மக்களின் படகுகள் அடித்து செல்லப்படுவதை கண்டும் சிறீலங்கா படையினர் பார்த்து கொண்டிருந்தனர் . இன்று அதிகாலையில் வடமராட்சி கிழக்கிலும் முல்லைத்தீவிலும் கடல் அலையால் பொது மக்களின் படகுகள் அடித்து செல்லப்படும் பொது இலங்கை கடற்படையினர் அதனை பார்த்து கொண்டிருந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். ஈழத்தின் கரையோரப்பகுதி எங்கும் காவலரண்களை அமைத்து தங்கியிருக்கும் கடல் படையினர் படகுகள் கடலில் அடித்து செல்லப்படும்போது பொதுமக்களுக்கு தெரிவித்து இருக்கலாம் ஆனால் தமிழர்கள் என்ற காரணத்தினால் தமக்கு படையினர் எதுவும் அறிவிக்க வில்லை என்று மக்கள் தெரிவித்தனர், இன்று காலையில் பொதுமக்களிடம் என்னநடந்தது என்று கேலியாக விசாரித்ததாக மக்கள் கோபத்துடன் தெரிவித்தனர். அன்பான தமிழர்களே நாம் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் சிங்கள வெறியன் எம்மை பார்த்து ரசித்து கொண்டு இருப்பதனை இதன் மூலம் என்றாலும் சிங்களவனுக்கு பினால் திரிபவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இதே இடத்தில் புலிகள் இருந்தால் எமக்கு உதவி செய்திருப்பார்கள் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.
0 Comments