Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் விபரங்களைத் திரட்டும் மர்மக் குழு!

கொழும்பில் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத குழுவினரால், குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோரும் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவத்தில், முழுப்பெயர், முகவரி, தேசிய இனம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், தொழில் முகவரி, பணிசெய்யும் காலம் உள்ளிட்ட பல விபரங்கள் கோரப்பட்டுள்ளன. போர் நடந்த காலங்களில் கொழும்பில் வசிக்கும் தமிழர்கள், இதுபோன்று அடிக்கடி படிவங்களை நிரப்பி ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறிலங்கா காவல்துறை, இராணுவம், காவல்துறை, விமானப்படை, கடற்படைப் புலனாய்வுப் பிரிவுகள் தனித்தனியாக இத்தகைய படிவங்கள் மூலம் விபரங்களை சேகரித்திருந்தன.

  
எனினும் தற்போது அத்தகைய பதிவு முறை இல்லாத சூழலில், அடையாளம் தெரியாத நபர்களால் இந்த படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கொமன்வெல்த் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடா அல்லது சிறுபான்மையினரைக் குறிவைக்கும் சிங்கள இனவாத குண்டர்களின் வேலையா என்று தெரியாமல் கொட்டாஞ்சேனை வாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொட்டாஞ்சேனை காவல்துறையிடம் முறையிட்டும், அவர்கள் அதுகுறித்து அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், அரச புலனாய்வுச் சேவைகள் பொதுமக்களிடம் தகவல் திரட்டுவதற்கு முன்னர், காவல்நிலையங்களுக்கு அறிவிப்பது வழக்கம் என்று கொட்டாஞ்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒவிற்றிகம தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments