Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முன்னாள் நீதியரசர் ஷிராணி மீதான வழக்கு ஒத்தி வைப்பு

தனது சொத்துகளை வெளிப்படுத்த தவறினாரென முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கை எடுப்பதற்கான திகதி நவம்பர் 14 இருந்து 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் வேண்டுகோளினை ஏற்று ஷிராணி பண்டாரநாயக்க மீதான வழக்கை ஒத்திவைக்கும் அறிவித்தலை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய விடுத்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த காலப்பகுதியில் பொதுநலவாய மாநாடு நடக்கவிருப்பதால் இந்த விசாரணையை நடத்துவது தவிர்க்க முடியாத பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம் என்பதனால் குற்றஞ்சாட்டப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான திகதியை நவம்பர் 14 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 19 க்கு ஒத்திவைக்கும்படி நீதவானிடம் ஆணைக்குழு ஒரு மனு மூலம் கேட்டிருந்தது.
இதனடிப்படையில் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு நவம்பர் 14 க்கு பதிலாக பெப்ரவரி 19 அன்று நீதிமன்றம் வரும்படி அழைக்கும் அறிவித்தலை நீதவான் விடுத்தார்.

Post a Comment

0 Comments