Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்




மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்




போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 


சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வுகள் தவிசாளர் சிற்றம்பலம் தலைமையில் நேற்றைய தினம் (14) இடம்பெற்றது. 



இதன்போது இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 



பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன் பிரேரணையை முன்மொழிய, உப தவிசாளர் அதனை வழிமொழிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 



இருந்தபோதிலும் குறித்த பிரேரணைக்கு உறுப்பினர் ச.ஞானலிங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments