மூன்றாவது முறையாகவும் பிரதீபா பிரபா விருது பெறும் த.கோபாலபிள்ளை அதிபர்.
ஜனாதிபதியினால் வழங்கப்படும் சிறந்த அதிபருக்கான பிரதீபா பிரபா விருது 3ஆவது முறையாகவும் மட்.நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வவுணதீவு விளாவட்டுவானைச்சேர்ந்த தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை அவர்களுக்கே இவ்விருது கிடைத்துள்ளது.
இவர் 1990ல் ஆசிரியராக நியமனம் பெற்று தன் அர்ப்பணிப்புடனான சேவையினை 23 வருடங்களாக படுவான்கரைப்பிரதேசத்திலேயே ஆசிரியராகவும் அதிபராகவும் வழங்கி வருகிறார்.
விளாவட்டுவான் விநாயகர் வித்தியாலயத்தில் 2001ல் புலமைப்பரிசில் பரீட்சையில் 5 மாணவர்களையும்இ மண்முனை மேற்கு கல்விப் பொருளாதார செயற்திட்டத்தின் மூலம் மண்முனை மேற்கு பிரதேசத்தில் 11 மாணவர்களையும்இ சித்தியடைய வைத்ததுடன்இ மட். கரையாக்கன் தீவு கணேசர் வித்தியலயத்தில்2008ல் முதல் முதலாக ஒரு மாணவர் சித்தியடைய வும் காரணமாக இருந்தார்.
மட். நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 2009 தொடக்கம் இன்றுவரை அதிபராக கடமையாற்றிவரும் இவரது காலத்'தில் க.பொ.த சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் முன்னேற்றமடைந்து 2001ஆம் ஆண்டு பெறுபேறுகள் 60 வீதமாக அதிகரித்தமையும்இ புலமைப்பரிசில் பரீட்சையில் 20 வருடங்களின் பின்னர் 2 மாணவர்கள் சித்தியடைந்தமையும் குறித்த பிரதேச கல்விச் சமூகத்தினரால்பாராட்டும்படியாக அமைந்தது.
இவரது காலத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில்இ இவருக்கு 2011இ 2012இ 2013ஆம் அண்டு களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் பிரதீபா பிரபா விருது தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: