|
கெசினோ தொடர்பில் சில அமைச்சர்கள் புத்தியின்றி செயற்படுவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவின் செயற்பாடு அவ்வாறானதொன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்தார். தங்களுடைய தேவைகளுக்காக அவர்கள் அப்படி செயற்படுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
|
மக்களுக்கு நிவாரணம் வழங்காது அரசாங்கம் கெசினோவை கொண்டுவர முயற்சிக்கிறது. ஐதேக இதனை முழுமையாக எதிர்க்கிறது. ஹோட்டல் வியாபாரம் என்ற போர்வையில் கெசினோவிற்கு அனுமதியளிக்க முடியாது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கத்தின் உள்ளக மோதலை காண முடிந்தது. அந்த கூட்டத்தில் பற்றவைக்கப்பட்ட குண்டு இன்று தீப்பொறியாக மாறியுள்ளது. அதனோடு அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதல் வெடி வெடித்துள்ளது. இந்தியா, கனடா இல்லாத பொதுநலவாய மாநாடு மணப்பெண் அற்ற திருமண வீடு போன்றது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது என ஹரேன் பெனாண்டோ தெரிவித்தார்.
|


0 Comments