இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் முதலிடம்
இலங்கையில் உள்ள 14 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது. இதற்கான பாராட்டு வைபவம் 09.10.2013 அன்று கிழக்கு பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணியினால் சுவிகரிக்கப்பட கிண்ணத்தை வீரர்களால் பல்கலைக்கழக உப வேந்தரிடம் கையளிக்கப்பட்டது. இவ்வைபவத்தில் உப வேந்தர், பதிவாளர், விளையாட்டு ஆலோசனை குழு உறுப்பினர்கள், மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments